search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் நீதிபதியாக இணைந்தார்.
    • இந்தப் படத்தில் யோகி பாபு, ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தமிழ் திரையுலகில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நீண்ட காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். இடையில், உணவுத் துறையில் தனி கவனம் செலுத்தி வந்த மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் நீதிபதியாக இணைந்தார்.

    இந்த நிலையில், மாதம்பட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார். "மிஸ் மேகி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் யோகி பாபு, ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் லதா ஆர். மணியரசு இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் மேகி ஸ்மித் நடித்திருந்தார்
    • 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த மேகி ஸ்மித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    ஜே.கே. ரவுலிங் எழுதிய நாவல்களைத் தழுவி உருவாக்கப்பட்ட ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகை மேகி ஸ்மித் [89 வயது]. இவர் வயது மூப்பு காரணமாக இன்று [செப்டம்பர் 27]  அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

    2 மகன்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளை கொண்ட மேகி ஸ்மித் குடும்பத்தினர் முன்னிலையில் அமைதியான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த மேகி ஸ்மித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி(The Prime of Miss Jean Brodie) மற்றும் கலிபோர்னியா சூட்(California Suite) ஆகிய படங்களுக்காக 2 ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார். பேராசிரியர் கதாபாத்திரம் மூலம் காலத்தால் அழியாது என்றும் வாழ்வார் என்று ஹேரி பாட்டர் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

     

    • வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
    • இந்தப் படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார்.

    ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஞானவேல் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "வேட்டையன்." அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    முன்னதாக இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களை அறிமுகம் செய்யும் வீடியோக்களை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இதன்படி ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரிய், ராணா டகுபதி, பகத் பாசில், அபிராமி ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்த வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டது.

    அந்த வரிசையில் வேட்டையன் படத்தில் நடிகர் கிஷோர் 'ஹரிஷ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறது. பிரபல நடிகரான 'ஆடுகளம்' கிஷோர் வன யுத்தம், வெண்ணிலா கபடி குழு, ஆடுகளம், உதயம் என்எச் 4, சார்பட்டா பரம்பரை, பொன்னியின் செல்வன், ஜெயிலர் என பல படங்களில் நடித்துள்ளார்.

    வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து இந்தப் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன்.
    • இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

    இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படத்தில்"முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

    அமரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலான ஹே மின்னலே இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்பொழுது சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சாய் பல்லவி படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மிகவும் துறுதுறுவென சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவியின் ஜோடி பார்க்கவே மிகவும் கியூட்டாக உள்ளது.

    மேஜர் முகுந்தனின் மனைவியும் இந்த காட்சியில் இடம்பெற்றுள்ளார். சாய் பல்லவியின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமரன் படத்தை குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேவரா ரிலீசை ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினார்.
    • ஆடு பலியிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகி இருக்கும் புதிய திரைப்படம் "தேவரா." இந்தப் படம் மூலம் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் இயக்குநர் கொரட்டலா சிவா இணைந்துள்ளனர். தேவரா படம் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார். உலகளவில் வெளியாகி இருக்கும் தேவரா படத்தின் ரிலீசை ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினார்.

    ஆட்டம், பாட்டம், பெரும் கொண்டாட்டத்தோடு ரிலீசான தேவரா ரசிகர்களின் வரம்பு மீறிய செயல்களால் தேவையற்ற சர்ச்சையில் சிக்கியுள்ளது. தேவரா படம் ரிலீசான திரையரங்க வாயிலில் ஆடு பலியிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திரையரங்கம் முன் ஆட்டை பலியிட்ட ரசிகர்கள் அதன் தலை மற்றும் உடலில் இருந்து சிந்திய இரத்தத்தை தேவரா போஸ்டரின் மீது தேய்த்தனர். இதே போன்று மற்றொரு திரையங்கில் தேவரா படத்தின் கட்-அவுட்டுக்கு தீ வைத்தனர்.

    திரைப்பட ரிலீசை ஒட்டி ஆடு பலி கொடுப்பது, கட்-அவுட்டுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் கொண்டாட்டத்தை மீறி, திரையரங்கு வரும் மற்ற ரசிகர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும், இத்தகைய சம்பவங்கள் பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகளும் அதிகம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னை காம்தார் நகர் முதல் தெருவிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

    மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் 4ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    இந்நிலையில், எஸ்பிபி வாழ்ந்த இல்லம் உள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    சென்னையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வசித்த பகுதி சாலைக்கு அவரது பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது பதிவில், "என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று இளையராஜா பதிவிட்டுள்ளார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயர் சூட்டியதற்காக முதல்வருக்கு கமல்ஹாசன், எஸ்.பி.பி.சரண் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்பொழுது SK23 படத்தில் நடித்து வருகிறார்.
    • சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார்.

    இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்பொழுது SK23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார்.

    மேலும் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் ஆகஸ்ட் இறுதிக்குள் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. திரைப்படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர் முருகதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அவரை வாழ்த்தி வீடியோ கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளனர். அதில் ஏ.ஆர் முருகதாஸ் ஆகஷன், கட் மற்றும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பிடி.எஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் `ரெட்ட தல’ படத்தை இயக்குகிறார்.
    • இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் `ரெட்ட தல' படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

    இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைப்பெறவுள்ளது. இதற்காக படக்குழு மொத்தமும் கோவாவிற்கு சென்றுள்ளனர். இதை படக்குழு புகைப்படத்துடன் அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை
    • கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் அவரது வாழ்வின் சோகத்தையும், மகிழ்ச்சியையும், பார்த்த அனுபவத்தையும் இப்படத்தின் மூலம் பகிர்ந்திருந்தார்.

    படத்தின் ஓடிடி அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 11 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடைசியாக இவரது நடிப்பில், 'சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது.
    • முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மேகா ஆகாஷ்க்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மேகா ஆகாஷ் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

    கடைசியாக இவரது நடிப்பில், 'சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மேகா ஆகாஷ்க்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.

    சென்னையில் நடைபெற்ற சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    இந்நிலையில் இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு தம்பதி வாழ்த்தி பெற்றனர். அப்போது எடுத்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வேட்டையன் படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் "மனசிலாயோ" சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் நடித்துள்ள கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் படக்குழு வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

    அந்த வரிசையில் வேட்டையன் படத்தில் நடிகை அபிராமி 'சுவாதி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.

    வேட்டையன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் வெளியான இப்படத்தின் பிரீவியூ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிகழ்ச்சி பல்வேறு எபிசோடுகளை கடந்து நடைபெற்று வருகிறது.
    • ரூ.1 கோடி கேள்விக்கு சரியான பதிலை அளித்தார்.

    நடிகர் அமிதாப் பச்சன், இந்தி சேனல் ஒன்றில், 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் 16-வது சீசன் இப்போது நடத்தி வருகிறார். இந்நிகழ்ச்சி பல்வேறு எபிசோடுகளை கடந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் முதல் கோடீஸ்வரரானார் 22 வயதான வாலிபர் ஒருவர்.

    ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 22 வயதான யுபிஎஸ்சி ஆர்வலரான சந்தர் பிரகாஷ் என்பவர் தான் க்ரோர்பதி 16 நிகழ்ச்சியில் கோடீஸ்வரரான முதல் போட்டியாளர் ஆவார்.



    "எந்த நாட்டின் மிகப்பெரிய நகரம் அதன் தலைநகரம் அல்ல, ஆனால் அமைதியின் இருப்பிடம் என்று பொருள்படும் அரபுப் பெயரைக் கொண்ட துறைமுகம் எது?" என்ற ரூ.1 கோடி கேள்விக்கு சரியான பதிலை அளித்தார். அதற்கு சரியான பதில் தான்சானியா.

    ×