search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ பணியாளர்கள்
    X
    மருத்துவ பணியாளர்கள்

    350 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு... சீன தடுப்பூசியின் செயல்திறன் குறித்து கவலை

    இந்தோனேசியாவில் ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியபோது, மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட 350-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் ஒரு சிலர் தீவிர பாதிப்பு இருந்ததால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோருக்கு அறிகுறியற்ற கொரோனா பாதிப்பு இருந்ததால், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக குதுஸ் மாவட்டத்தில் அதிக பாதிப்பு உள்ளது.

    பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களில் கிட்டத்தட்ட அனைவருமே சீனாவின் சினோவாக் தடுப்பூசியை போட்டுள்ளதாக இந்தோனேசிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. 
    தடுப்பூசி
     போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், சீன தடுப்பூசி உள்ளிட்ட சில தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த கவலை அதிரித்துள்ளது. 

    தடுப்பூசி போடும் பணி

    இந்தோனேசியாவில் ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியபோது,  மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது.  ஜனவரி மாதம் மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு 158 ஆக இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறைந்து மே மாதத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 
    Next Story
    ×