search icon
என் மலர்tooltip icon
    • சிவில் சர்வீஸ் தேர்வு கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது
    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது வினாத்தாள்களை எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம்

    ஐ ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதியளித்துள்ள நிலையில், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கின் விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம் என யோசனை தெரிவித்தனர்.

    இந்த மொழி பெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம் எனவும், இது சம்பந்தமாக நேர்மறையாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 108 ரன்களை குவித்தார்.
    • மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய சென்னை அணிக்கு அஜிங்க்யா ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 108 ரன்களை குவித்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 11 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    போட்டி முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. சென்னை சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ரன்களையும், துபே 27 பந்துகளில் 66 ரன்களை குவித்தனர். லக்னோ சார்பில் மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • மார்வெல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது
    • மார்வெல் ஸ்டுடியோவில் இருந்து அடுத்ததாக Deadpool & Wolverine படம் வெளியாக உள்ளது.

    மார்வெல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் இருந்து இன்னொரு சூப்பர் ஹீரோ படம் வெளியாக உள்ளது. மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர்களாக மாறிய படங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தற்போது புதிய படம் வெளியாக உள்ளது. மார்வெல் ஸ்டுடியோவில் இருந்து அடுத்ததாக Deadpool & Wolverine படம் வெளியாக உள்ளது.

     

    ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் ஜூலை 26ஆம் தேதி திரையங்களில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

     

    முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்ச்சராக வெளிவரவிருக்கும் இந்த படத்தின் டிரைலர் சுவாரஸ்யமாக உள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மீண்டும் ஒருமுறை மகிழ்விக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. எம்மா கொரின், மொரீனா பாக்கரின், ராப் டெலானி, லெஸ்லி உக்காம்ஸ், கரண் சோனி, மேத்யூ மக்ஃபேடியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். Deadpool & Wolverine உலகம் முழுவதும் ஜூலை 26 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    படத்தின் டிரெயிலர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 28 பந்தில் ஏழு பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
    • ருதுராஜ் கெய்க்வாட் சதத்தில் 11 பவுண்டரி, 3 சிக்ஸ் அடங்கும்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் சென்னை அணி ரன்கள் குவிக்க திணறியது. நேரம் செல்ல செல்ல ரன்வேகத்தை அதிகரித்தது. ருதுராஜ் கெய்க்வாட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    28 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 18-வது ஓவரில் பவுண்டரி அடித்து சதம் விளாசினார். அவர் 56 பந்தில் சதம் அடித்தார். இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஒரு வீரர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். ருதுராஜ் கெய்க்வாட் சதத்தில் 11 பவுண்டரி, 3 சிக்ஸ் அடங்கும்.

    இந்த சீசனில் பட்லர் 2 சதம், டிராவிட் ஹெட், சுனில் நரைன், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தலா ஒரு சதம் விளாசியுள்ளனர்.

    • இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்தாண்டு மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'.
    • படத்தை பார்த்து ரஜினி உள்பட நிறைய திரைப்பிரபலங்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்தாண்டு மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    படத்தை பார்த்து ரஜினி உள்பட நிறைய திரைப்பிரபலங்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அயோத்தி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் நடித்த படம் வெற்றியடைந்தது.

    அயோத்தி படம் வெளியாகி 1 வருடம் கடந்த நிலையில் அப்படத்தின் இயக்குனரான மந்திர மூர்த்தி இயக்கும் படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பாக சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிக்கவுள்ளார். இதற்கு முன் ஆண்டவன் கட்டளை, மருது, தங்க மகன் போன்ற வெற்றி படங்களை கோபுரம் பிலிம்ஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தில் யார் நடிக்க போகிறார்கள் எம்மாதிரியான கதைக்களம் கொண்ட திரைப்படம் போன்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.
    • மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.

    இதில் மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது EVM தொடர்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது தொடர்பாக சுவேந்து அதிகாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு சுவேந்தி அதிகாரி "EVM குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி கர்நாடகா மற்றும் தெலுங்கானா தேர்தலில் வெற்றி பெற்றபோது EVM சரியானது. பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. 400 இடங்களுக்கு மேல் பிடிக்கும் வகையில சென்று கொண்டிருக்கிறது" என்றார்.

    • 2.5 லட்சம் பார்ச்சூனர் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
    • வெளிப்புறம், உள்புறத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

    டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் எஸ்.யு.வி. மாடலின் புது வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புது வெர்ஷன் பார்ச்சூனர் லீடர் எடிஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த வெர்ஷன் 4x2 வேரியண்ட்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

    பார்ச்சூனர் லீடர் எடிஷன் மாடலில் டூயல் டோன் வெளிப்புற பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பிளாக்டு அவுட் அலாய் வீல்கள், வயர்லெஸ் சார்ஜர், TPMS, முன்புறம்-பின்புறம் பம்ப்பர் ஸ்பாயிலர்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் சூப்பர் வைட் மற்றும் பிளாக் ரூஃப், பிளாட்டினம் பியல் வைட் மற்றும் பிளாக் ரூஃப், சில்வர் மெட்டாலிக் மற்றும் பிளாக் ரூஃப் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2.5 லட்சம் பார்ச்சூனர் யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய பார்ச்சூனர் லீடர் எடிஷன் மாடலின் விலையை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் அக்சஸரீக்களுக்கு ஏற்ற வகையில், காரின் விலை வேறுப்படும்.

    எனினும், தற்போது விற்பனை செய்யப்படும் பார்ச்சூனர் ஸ்டான்டர்டு எடிஷன் உடன் ஒப்பிடும் போது லீடர் எடிஷன் மாடலின் விலை ரூ. 35 லட்சத்து 93 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 38 லட்சத்து 21 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது
    • ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன

    நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், தென்னித்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடர்வதற்காக வைப்புரீதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூ.50 இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி அவர்களிடம் வழங்கினார்.

    இதற்கு முன்பாக, நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளுக்காக நடிகர் கமல்ஹாசன் 1 கோடியும், நடிகர் விஜய் 1 கொடியும் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வேலூர், காஞ்சிபுரத்தில் நாளை பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை
    • தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

    தமிழகம் முழுவதும் இன்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் ௧௦௮ டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 100 டிகிரி வெப்பமும், கோவையில் 102 டிகிரி வெப்பமும் பதிவானது

    வேலூர், காஞ்சிபுரத்தில் நாளை பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    ஒவ்வொரு ஊரிலும் பதிவான வெயிலின் அளவு வருமாறு:-

    தஞ்சாவூர் 102.2, திருப்பத்தூர் 106.88, திருச்சி 104.18, திருத்தணி 103.64, வேலூர் 106.7, பாளையங்கோட்டை 102.2 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    • .படம் வெளியாகி இரண்டே நாட்களில் 10 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது
    • ரீ- ரிலீஸ் செய்த படத்தில் இதுவரை அதிகமாக வசூலித்த திரைப்படம் கில்லியே ஆகும்.

    தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திரைக்கு வந்த படம் கில்லி. படத்தில் வேலு கதாபாத்திரத்தில் விஜய்யும் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷாவும் முத்துப்பாண்டியாக பிரகாஷ்ராஜும் நடித்திருந்தனர்.

    கில்லி படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் 50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது. படம் வெளியாகி உள்ள திரையரங்குகள் அனைத்திலும் சில தினங்களுக்கு டிக்கெட் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் அனுபவத்தையும் , ஆடிய ஆட்டத்தையும் ஒன்ஸ் மோர் பாடல்களை கேட்டு திரையரங்குகளில் ஆடிக் கொண்டு இருக்கும் வீடியோவை நாம் சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக பார்த்த வண்ணம் இருக்கிறோம்.

    2004 ஆம் ஆண்டு வெளியான போது படத்திற்கு எத்தகைய வரவேற்பு கிடைத்ததோ அதே அளவு 20 ஆண்டுகளுக்கு பிறகும் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி இரண்டே நாட்களில் 10 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. ரீ- ரிலீஸ் செய்த படத்தில் இதுவரை அதிகமாக வசூலித்த திரைப்படம் கில்லியே ஆகும்.

    கில்லி ரீ ரிலிஸ் பற்றியும் மக்களின் கொண்டாடத்தை பற்றியும் திரிஷா அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் அவரது மகிழ்ச்சியை சில தினங்களுக்கு முன் பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து இன்று பிரகாஷ் ராஜ் அவரது எக்ஸ் பக்கதில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

    அதில் லவ் யூ ஆல் செல்லம்ஸ் முத்துபாண்டி கதாப்பாத்திரத்தை காதலித்ததற்கு . உங்கள் அன்பில் நான் மிகவும் மெய் சிலிர்த்து போகிறேன். இயக்குனர் தரணி சாருக்கும் தயாரிப்பாளரான ரத்னம் சாருக்கும், ம்ய் டியர் விஜய்க்கும் , என்னோட செல்ல திரௌஷாவுக்கும் என் மன்மார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

    படம் விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல் வார தினங்களான இன்றும் பல திரையரங்குககளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×