ஆன்மிக களஞ்சியம்

பொல்லாப்பிள்ளையார் சரியா?

Published On 2024-02-10 10:41 GMT   |   Update On 2024-02-10 10:41 GMT
  • விநாயகர் சிந்தனை கூர்மையைக் கொடுத்து இறைவன் பால் பக்தியை அதிகரிக்கச் செய்பவர்.
  • எனவே அவர் பொள்ளாப்பிள்ளையார் எனக் கூறுவதே சரியானது.

சிவன் கோவில் என்றாலே விநாயகரை வணங்கி கோவிலின் உள்ளே செல்வது வழக்கம்.

விநாயகர் சிந்தனை கூர்மையைக் கொடுத்து இறைவன் பால் பக்தியை அதிகரிக்கச் செய்பவர்.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட விநாயகர் பல திருப்பெயர்கள் தாங்கி சிதம்பரம் கோவிலில் காணக்கிடைக்கிறார்.

முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் ஆகியோர் தனிச் சன்னதி கொண்டு அவர்கள் திருநாமத்திற்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார் என்பது நம்பிக்கை.

சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறை சுவடிகள் இருப்பதை இங்குள்ள பொல்லாப் பிள்ளையார் காட்டிக் கொடுத்ததாகக் கூறுவர்.

பொல்லாப் பிள்ளையார் என்பது மிகப் பொல்லாதவன் என்ற அர்த்தத்தை தராது. பொள்ளா என்றால் உளியால் பொள்ளப்படாதவர், சுயம்பு என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

எனவே அவர் பொள்ளாப்பிள்ளையார் எனக் கூறுவதே சரியானது.

அத்திருப்பெயர் மருவி பொல்லாப் பிள்ளையார் ஆகிவிட்டது.

Tags:    

Similar News