ஹார்லி டேவிட்சன் X440 இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
- ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் 440சிசி, சிங்கில் சிலின்டர், ஆயில், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை மோட்டார்சைக்கிள் X440 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹார்லி டேவிட்சன் X440 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்டைலிங்கை பொருத்தவரை ஹார்லி டேவிட்சன் X440 மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ஹார்லி டேவிட்சன் பிரான்டிங் செய்யப்பட்டு சிங்கில் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஃபிலாட் ஹேன்டில்பார், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், மெஷின்டு அலாய் வீல்கள், ரெட்ரோ ஸ்டைல் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் ஃபுல் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த பேஸ் வேரியண்ட் சிங்கில் டோன் பெயின்ட் மற்றும் வயர் ஸ்போக் வீல்களை கொண்டிருக்கிறது. மிட் வேரியண்டில் அலாய் வீல் மற்றும் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
டாப் எண்ட் மாடலில் டைமன்ட் கட் அலாய் வீல்கள், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 3டி லோகோ, ப்ளூடூத் மாட்யுல் மூலம் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 440சிசி, சிங்கில் சிலின்டர், ஆயில், ஏர் கூல்டு என்ஜின் மற்றும் 2 வால்வு செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27 ஹெச்பி பவர், 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
ஹார்டுவேரை பொருத்தவரை X440 மாடலில் டிரெலிஸ் ஃபிரேம், 43mm அப்சைடு-டவுன் முன்புற ஃபோர்க்குகள், கியாஸ் சார்ஜ், பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டுவின் ரியர் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு இரண்டு வீல்களிலும் சிங்கில் டிஸ்க், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் சைடு ஸ்டான்டு என்ஜின் கட்-ஆஃப் வசதி வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
ஹார்லி டேவிட்சன் X440 பேஸ் மாடல் ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம்
ஹார்லி டேவிட்சன் X440 மிட் வேரியண்ட் ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம்
ஹார்லி டேவிட்சன் X440 டாப் எண்ட் வேரியண்ட் ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.