பைக்

ஆட்டோ ஷாங்காய் நிகழ்வில் ஹார்லி டேவிட்சன் X500 அறிமுகம் - இந்தியா வருமா?

Published On 2023-05-05 11:55 GMT   |   Update On 2023-05-05 11:55 GMT
  • ஹார்லி டேவிட்சன் X500 மாடலில் டியூபுலர் ஃபிரேம், 500சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது.
  • இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சீனாவை சேர்ந்த வாகன உற்பத்தியாளரான கியூஜெ மோட்டார் உடன் இணைந்து சர்வதேச சந்தையில் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டது. இந்த கூட்டணியின் அங்கமாக X500 பெயரில் புதிய மோட்டார்சைக்கிள் ஆட்டோ ஷாங்காய் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹார்லி டேவிட்சன் X500 மாடல் பெனலி லியோன்சினோ 500 மாடல் உருவாகி இருக்கும் பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் X500 மாடலும் டியூபுலர் ஃபிரேம் மற்றும் 500சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இதில் உள்ள என்ஜின் 47 ஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

 

ஹார்டுவர் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் யுஎஸ்டி ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், டூயல் டிஸ்க் பிரேக், இருபுறமும் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது.

இந்தியாவில் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி அமைத்து இருப்பதால், புதிய X500 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது. எனினும், ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் புதிய மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

Tags:    

Similar News