பைக்

பைக்கின் விலையை ரூ. 1.14 லட்சம் குறைத்து அதிரடி காட்டிய நிறுவனம்

Published On 2024-11-20 11:17 GMT   |   Update On 2024-11-20 11:17 GMT
  • இதன் விலை ரூ. 17 லட்சத்து 13 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
  • தற்போது இந்த பைக்கின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிளாக்ஷிப் ஸ்போர்ட் பைக் மாடலான நின்ஜா ZX-10R விலையை கணிசமாக குறைத்துள்ளது. அதன்படி இந்த பைக்கின் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் குறைந்துள்ளது. விலை குறைப்பை தொடர்ந்து நின்ஜா ZX-10R விலை தற்போது ரூ. 17 லட்சத்து 34 ஆயிரம் என மாறி இருக்கிறது.

2025 நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை ரூ. 17 லட்சத்து 13 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. பிறகு இந்த பைக்கின் விலை அதிகரிக்கப்பட்டு ரூ. 18 லட்சத்து 50 ஆயிரம் என மாறியது. இந்த நிலையில் தான் தற்போது நின்ஜா ZX-10R விலை குறைக்கப்பட்டுள்ளது.

 


கவாசகி நின்ஜா ZX-10R மோட்டார்சைக்கிளில் 998சிசி, இன்-லைன் 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 200 ஹெச்பி பவர், 114.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், பை-டைரக்ஷனல் குயிக்-ஷிப்டர் வழங்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை இந்த பைக்கில் டிஎப்டி கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, பல்வேறு ரைடிங் மோட்கள், டூயல் சேனல் ஏபிஎஸ், குரூயிஸ் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், எஞ்சின் பிரேக் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News