சினிமா

பிரபல இந்தி சினிமா பாடகரின் மகன் கைது

Published On 2018-03-14 04:02 GMT   |   Update On 2018-03-14 04:02 GMT
ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பிரபல சினிமா பாடகரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திப்பட திரையுலகில் பிரபல சினிமா பாடகராக இருந்து வருபவர் உதித் நாராயணன். இவரது மகன் ஆதித்யா. இவர் சம்பவத்தன்று அந்தேரி மேற்கில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அங்குள்ள சார்பங்களா அருகே வந்தபோது ஒரு வளைவில் காரை திருப்ப முயன்றார்.

இதில் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் ஆட்டோ பின்புறம் பலத்த சேதமடைந்தது. மேலும் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் ராஜ்குமார்(வயது64) மற்றும் பெண் பயணி சுரேகா(32) ஆகியோர் காயமடைந்தனர்.



இதுபற்றி தகவல் அறிந்த வெர்சோவா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய ஆதித்யாவை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட ஆதித்யாவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் குடிபோதையில் காரை ஓட்டினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News