சினிமா செய்திகள்

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷன் மீது பெங்காலி பாடகி குற்றச்சாட்டு

Published On 2024-12-13 14:30 GMT   |   Update On 2024-12-13 14:30 GMT
  • நான் மும்பையில் வசித்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
  • மியூசிக் அறைக்குள் தனியாக இருந்தபோது பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார்.

சினிமாத்துறையில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக பல்வேறு நடிகைகள் மற்றும் சினிமாத்துறையில் பணியாற்றும் பெண் கலைஞர்கள் முன்னணி நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் மீது குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ் சினிமா, மலையாள சினிமாவில் Me Too என்ற வடிவில் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பியது.

இந்த நிலையில் மூத்த இசையமைப்பாளரான ராஜேஷ் ரோஷன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெங்காலி பாடகி லக்னாஜிதா சக்ரபோர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

போட்காஸ்ட் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

நான் மும்பையில் வசித்தபோது ராஜேஷ் ரோஷன், அவரது சாந்தாக்ரூஸ் இல்லத்தில் சந்திக்க வரும்படி என்னை அழைத்தார். நான் அங்கு சென்றேன். அப்போது தனக்கு ஹிரிதிக் ரோஷனின் மாமனார் (Uncle) மியூசிக் அறையில் பாலியல் தொந்தரவு நிகழ்ந்தது.

நாங்கள் மியூசிக் அறையில் அமர்ந்து இருந்தோம். மியூசிக் தொடர்பான எல்லா வகையான கருவிகளும், வசதிகளும் இருந்தன.

நாங்கள் ஐ-பேட்டில் பாடலுக்கான வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது என்னை நோக்கி ராஜேஷ் ரோஷன் சற்று நகர்ந்து வந்தார். அதை நான் கவனித்தேன். பின்னர் எந்தவித நகர்வுமின்றி, அவருடைய கையை என்னுடைய பாவாடைக்குள் (Skirt) விட்டார். நான் உடனடியாக அதிர்ச்சி அடைந்து அந்த இடத்தில் இருந்து உடனடியாக எழுந்து வெளியே சென்றுவிட்டேன்.

நான் இதுகுறித்து பிரச்சனை செய்யவில்லை. அழவில்லை. ஏனென்றால், இது அவருடைய பிரச்சனை மற்றும் தவறு. அவர் அத்தகைய நடத்தையை நாடினார் என நான் உணர்ந்தேன். இது அவர் செய்தார். என்னுடைய தவறு ஏதும் இல்லை.

இவ்வாறு சக்ரபோர்த்தி தெரிவித்தார்.

பாடகியின் குற்றச்சாட்டு தொடர்பான இதுவரை ராஜேஷ் ரோஷன் ஏதும் கூறவில்லை. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News