சினிமா செய்திகள்
null

நடிப்பு, தயாரிப்பு, இசையமைப்பு என 3 இன்1 ஆக களமிறங்கும் ஜி.வி. பிரகாஷ்

Published On 2024-12-13 13:58 GMT   |   Update On 2024-12-13 16:03 GMT
  • சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன்.
  • இப்படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தின் இசையமைப்பாளராவார். இந்த இரண்டு படத்திலும் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல ஹிட்டானது. 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மிண்டும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாக சில மாதங்களுக்கு முன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

கடந்த மாதம் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன்.செல்வராகவன் தற்பொழுது மீண்டும் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். இப்படத்தின் டைட்டிலை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது. திரைப்படத்திற்கு Mental மனதில் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை ஜி.வி பிரகாஷ் தயாரிக்கவும் செய்துள்ளார். படத்தின் டைட்டிலை நடிகர் தனுஷ் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்படம் ஒரு காதல் கதையாக அமைந்துள்ளது. திரைப்படத்தில் பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News