null
அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்.. ஏன் தெரியுமா?
- நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
- இவருக்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்', இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தின் மூலமாக பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் பலர் ரஜினிகாந்த் கோவிலுக்கு பாலாபிஷேகம் செய்து பொது மக்களுக்கு உணவு வழங்கினார்கள்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த மதிப்பிற்குரிய ஆளுநர் திரு.ரவி அவர்களுக்கும், இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு அறிக்கையில், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய திரு.எடப்பாடி பழனிச்சாமி, திரு. ஓ. பன்னீர் செல்வம், திரு.அண்ணாமலை, திரு.சந்திரபாபு நாயுடு மற்றும் என்னை வாழ்த்திய என்னுடைய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும்.., நண்பர் திரு.கமலஹாசன், திரு.இளையராஜா, திரு.வைரமுத்து, திரு.S.P.முத்துராமன், திரு.ஷாருக்கான் மற்றும் கலையுலகத்தை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்..,
ரஜினிகாந்த் அறிக்கை
திரு.சச்சின் டெண்டுல்கர், திரு.சுரேஷ் ரெய்னா, திரு.ஹர்பஜன் சிங் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும்.., அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும்.., என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...
உழைப்பு:-"பொழுதைப் போக்கும்! வறுமையை நீக்கும்!! உடலினை காக்கும்"
"உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.