ஒரே விமானத்தில் கோவா சென்ற விஜய் - திரிஷா
- 'தெறி' படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் 'நடிகையர் திலகம்' என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், கோவாவில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதனையடுத்து திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது. அவர் பட்டு வேட்டி சட்டையில் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படமும் வெளியானது.
இதனிடையே நடிகர் விஜய் மற்றும் திரிஷா கோவாவுக்கு விமானத்தில் சென்றதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
மேலும், இருவரும் ஒரே விமானத்தில் கோவா சென்றதாக கூறும் படிவம் ஒன்றின் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.