அண்ணன் இப்போ `Zero balance Hero' - குடும்பஸ்தன் படத்தின் முதல் பாடல் வெளியீடு
- ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ளார்.
- தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியிலும் அது வெற்றிப்படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். இப்படத்திற்கு குடும்பஸ்தன் என பெயரிட்டுள்ளனர். இவர் இதற்கு முன் நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் இயக்குனராக இருந்தவர். இதுவே இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும்.
தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார். இவர்களுடன் குரு சோமசுந்தரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது நகைச்சுயான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் முதல் பாடலான ஸீரோ பேலன்ஸ் ஹீரோ பாடல் வெளியாகியுள்ளது.
இப்பாடலை வைசாக் எழுதிய வரிகளில் ஷான் ரோல்டன் பாடியுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சினிமாகாரன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சுஜித் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.