சினிமா
படத்தை முடிக்க ஆவலாக காத்திருக்கும் நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், படத்தை விரைவில் முடிக்க ஆவலாக காத்திருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, முன்னணி கதாநாயகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். பிரம்மாண்டமாக உருவாகி வந்த இந்த படம் திடீர் என்று நின்று போனதாம். அதன்பின் கொரோனா ஊரடங்கு என்று படம் பாதியிலேயே நிற்கிறதாம்.
இதற்கிடையில் நடிகை திருமணமும் செய்துக் கொண்டாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியாமல் மற்ற படங்களில் நடிக்க மறுத்து வருகிறாராம். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் தள்ளி போட்டிருக்கிறாராம். இதனால் எப்போது இந்த படம் முடியும் என்று ஆவலாக காத்திருக்கிறாராம் நடிகை.