காமன்வெல்த்-2022
காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டி- இந்தியா வெற்றிக்கு 162 ரன்கள் இலக்கு
- டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலிய அணி.
- ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 61 ரன்கள் குவித்தார்.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியில் அதிபட்சமாக பெத் மூனி 61 ரன்கள் குவித்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்னும், ஆஷ்லே கார்ட்னர் 25 ரன்னும் எடுத்தனர்.
20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்தது. இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி உள்ளது.