சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா லெஜெண்டஸ்
- இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது
- நமன் ஓஜா இந்திய அணிக்காக அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
ராய்ப்பூர்:
இந்தியாவில் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என 8 நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
இதில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. நமன் ஓஜா அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் இஷான் ஜெயரத்னே மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லைஅ.
இறுதியில், இலங்கை அணி 18.5 ஓவரில் 162 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய லெஜெண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.