கிரிக்கெட் (Cricket)

சதம் அடித்த முதல் கேரளா வீரர்.. சஞ்சு சாம்சன் வரலாற்று சாதனை

Published On 2023-12-22 07:27 GMT   |   Update On 2023-12-22 07:27 GMT
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் விளாசினார்.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை சஞ்சு சாம்சன் பதிவு செய்துள்ளார்.

பார்ல்:

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் நேற்று பகல்-இரவாக நடந்தது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார். அவர் 108 ரன்களில் (114 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். இதனையடுத்து 297 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா 45.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த கேரளா வீரர் என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த மற்றொரு வீரரான கருண் நாயர் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி அரைசதம் அடித்தது இல்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் ஒரு போட்டியில் 300 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

Tags:    

Similar News