கிரிக்கெட் (Cricket)
null

கோபத்தில் பேட்டை தூக்கி எறிந்த ரஷித்கான் - வைரலாகும் வீடியோ

Published On 2024-06-25 04:19 GMT   |   Update On 2024-06-25 04:19 GMT
  • ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர் வரை 100 ரன்களை கூட எடுக்க முடியாமல் திணறியது.
  • இதனால் 20 ஓவர் முடிவில் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

புதுடில்லி:

ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அவர் குளிர்ச்சியை இழந்து பேட்டிங் பார்ட்னர் மீது தனது மட்டையை வீசினார் கரீம் ஜனத் இரண்டாவது ஓட்டத்தில் தவறான தொடர்புக்குப் பிறகு. பதட்டமான ஐசிசி ஆண்கள் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது

டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களின் மந்தமான ஆட்டத்தில் 20 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி 18 ஓவர் வரை 100 ரன்களை கூட எடுக்க முடியாமல் திணறியது.

இதனால் இறுதிகட்டத்தில் பேட்டிங் செய்த ரஷித் கான் அதிரடி ஆட்டத்தை ஆட முயற்சித்தார். அந்த வகையில் ஒரு பந்தை சிக்சர் அடிக்க முயல்வார். அது பேட்டின் விளிம்பிள் பட்டு வானத்தை நோக்கி பறந்தது. உடனே ரஷித்கான் 2 ரன்களை எடுக்க ஓடினார். ஆனால் எதிர் முனையில் இருந்த கரீம் ஜனத் ஓட மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரஷித் கான் பேட்டை தூக்கி எறிந்தார்.

இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News