தோஷ பரிகாரங்கள்

கடன் தொல்லை தீர பைரவருக்கு செய்ய வேண்டிய பரிகாரம்...

Published On 2022-10-06 05:41 GMT   |   Update On 2022-10-06 05:41 GMT
  • இந்த பரிகாரம் செய்தால் பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.
  • பைரவருக்கு இந்த பரிகாரம் செய்தால் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.

கடன் வாங்கி வட்டி, அசல் கட்ட இயலாதவர்கள் ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, செந் தாமரை பூ அணிவித்து, கேரட் அல்வா, கோதுமை அரிசி பலகாரம், அவல், கேசரி, சிவப்பு அப்பிள் படையலிட்டு, புனுகு சாற்றி வெண்பொங்கல் நைவேத்தியம் இடவும்.

ஒரு தலை வாழை இலை வைத்து அதன் மீது நெல் 1 படி பரப்பி அதன் மீது ஒரு தலை வாழை இலை வைத்து பச்சரிசி 1 படி குங்குமம் சிறிதளவு மஞ்சள்பொடி, நெய் கலந்து பரப்பி அதைச்சுற்றிலும் ஐந்து எண்ணெய், சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து முப்பது பழங்களில் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ சொர்ணபைரவரை வழிபடலாம்.

இந்த வழிபாட்டை செய்யும்போது பைரவி தேவி காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து, ஸ்ரீ பைரவரை ஒன்பது வாரம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட செல்வச் செழிப்பைப்பெறலாம். பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.

பெரிய பழங்களில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் சிறிய பழங்களில் ஏற்றலாம். அல்லது சிறிய வெங்கல கிண்ணத்தில் முப்பது மிளகைத்தூள் செய்து தீபம் ஏற்றலாம் அல்லது ஒரு பூசணியில் மிளகு தீபம் ஏற்றலாம்.

இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜனம அல்லது த்ரிஜன்ம நஷத்திரம் அன்றும் செய்வது சாலச்சிறந்தது. மற்றும் பவுர்ணமியும், வளர்பிறை அஷ்டமி நாளிலும் இந்தப் பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம். நமது கவலைகள் பிரச்சினைகள், ஏக்கங்கள், சோகங்கள், இப்படி அனைத்தையும் போக்குவதற்கு ஓர் அரிய உபாயம் இந்த பூஜை.

ஸ்ரீ ஸ்வர்ண பைரவர் மந்திரம் ஜபிக்கும்போது, ஏலக்காய் சிறிதளவு குங்குமம், மஞ்சள், நெய் கலந்து முத்துக்களால் பைரவர் திருவடியில் அர்ச்சனை செய்யலாம். பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம். ஒரு பிடி ஏலக்காயை பைரவர் பாதத்தில் வெற்றிலை மேல் வைக்கலாம் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.

Tags:    

Similar News