கோணாங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலயத்தில் 23-ந்தேதி தேர்பவனி
- புனித பெரியநாயகி அன்னையின் ஓவியம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
- தினசாி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.
விருத்தாசலம் அருகே கோணாங்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பெருவிழா நேற்று ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. பின்பு மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித பெரியநாயகி அன்னையின் ஓவியம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
பெருவிழாவையொட்டி தினசாி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறும். மேலும் வருகிற 23-ந் தேதி காலை திருப்பலியும், இரவு 9 மணி அளவில் புனித பெரிய நாயகி அன்னை ஆலய தேர்பவனியும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் தேவ சகாயராஜ், உதவி பங்குத்தந்தை அந்தோணிராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.