வழிபாடு

விதவிதமான அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரத்தையும் படத்தில் காணலாம்.

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மலர் வழிபாட்டு விழா

Published On 2023-05-30 07:31 GMT   |   Update On 2023-05-30 07:31 GMT
  • குறிஞ்சி ஆண்டவருக்கு பல லட்சம் மலர்களைக் கொண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • மலர்களால் முருகன் வடிவம் செய்யப்பட்டு இருந்தது.

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக 3 நாட்கள் நடைபெறும் கோடை விழா மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

கொடைக்கானலில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோவிலான குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சியின் போது குறிஞ்சி ஆண்டவருக்கும் சிறப்பு மலர் வழிபாடு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு குறிஞ்சி ஆண்டவருக்கு பல லட்சம் மலர்களைக் கொண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்வேறு வண்ணங்கள் கொண்ட மலர்களை கொண்டு தோரணம், அலங்காரம் அமைக்கப்பட்டதுடன் மலர்களால் முருகன் வடிவமும் செய்யப்பட்டு இருந்தது.

இதில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு குறிஞ்சி ஆண்டவர் அலங்காரம் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

விதவிதமான மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் கோடை இன்டர்நேஷனல் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News