சவுதி ப்ரோ லீக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ
- அபா அணிக்கு எதிராக ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார்.
- இந்த சீசனில் 29 கோல்கள் அடித்துள்ளார்.
கால்பந்து போட்டியின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். ஐந்து முறை பலோன்-டி'ஆர் விருதை வென்றுள்ள அவர், தற்போது சவுதி ப்ரோ லீக்கில் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று அல்-நசர் அபா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். மேலும் இரண்டு கோல் அடிப்பதற்கு உதவி புரிந்தார். இதனால் அல்-நசர் 8-0 என வெற்றி பெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அல்-தாய் அணிக்கு எதிராக ஏற்கனவே ஹாட்ரிக் அடித்திருந்தார். இந்த போட்டியில் அல்-நசர் அணி 5-1 என வெற்றி பெற்றிருந்தது. ரொனால்டோ இந்த சீசனில் மொத்தம் 29 கோல் அடித்துள்ளார்.
இந்த சீசனில் அல்-நசர் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. அல்-ஹிலால் முதல் இடம் பிடித்துள்ளது. இன்னும் 8 போட்டிகள் மீதமுள்ளன. அந்த அணியின் அலேக்சாண்டர் மிட்ரோவிக் 22 கோல்கள் உடன் 2-வது இடத்தில் உள்ளார்.