தலைவலியை குணப்படுத்தும் உடற்பயிற்சி
- உடற்பயிற்சி மூலம் தலைவலியை சரிசெய்ய முடியும்.
- தலைவலியில் இருந்து விடுபட யோகாசனங்கள் உதவிபுரிகின்றன.
இன்றைக்கு அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய சாதரணமானதாக தலைவலி மாறிவிட்டிருக்கிறது. இதனை சரியாக கையாண்டால், நம்முடைய வாழ்க்கை முறையில் தலைவலி வராமல் தடுக்க முடியும். தலைவலி ஏற்ப்பட்டால் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் எப்படி அதனை சமாளிக்கலாம் என்றும் தெரிந்து கொள்ளலாம்.
உடற்பயிற்சி மூலம் தலைவலியை சரிசெய்ய முடியும். நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை தலைவலி ஆகும். தலைவலி வந்துவிட்டால் போதும் நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது. இந்த தலைவலியில் இருந்து விடுபட யோகாசனங்கள் பெரிதும் உதவிபுரிகின்றன. தலைவலியில் இருந்து விடுபட யோகாசனங்கள் எந்த வகையில் உதவிபுரிகின்றன என்பதை பார்க்கலாம்
உத்தானபாத ஆசனம்:
தலைவலியை குணப்படுத்த சிறந்த ஆசனம் உத்தானபாத ஆசனம் ஆகும்.இந்த ஆசனம் செய்வதால் ஜீரண கோளாறு, மலச்சிக்கல், தலைவலி போன்றவை நீங்கும்.
செய்முறை :
* முதலில் தரையில் ஒரு துணியை விரித்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் அப்படியே இரு கால்களையும் கைகளையும் சேர்த்து வைத்து கொண்டு மல்லார்ந்து படுக்க வேண்டும்.
* பின்னர் அப்படியே இரு கால்களையும் கைகளையும் மேல்நோக்கி தூக்க வேண்டும். பின்பு தலையை மட்டும் கீழே இருக்கும்படி வைத்துக் கொண்டு உடலை தூக்கி அப்படியே கண்களை திறந்து பின்புறம் பார்க்க வேண்டும்.
* இவ்வாறு மூச்சை அடக்கி பத்து வினாடிகள் கழித்து மூச்சை மெதுவாக விட்டுக்கொன்டே கால்களை மெதுவாக இறக்க வேண்டும். ஒரு நிமிடம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் ஒரு முறை இந்த ஆசனத்தை செய்யவும்.
இவ்வாறு செய்வதால் உச்சி முதல் பாதம் வரையில் உள்ள நரம்புகள் அனைத்தும் சிறப்பாக இயங்கும். வாயுத் தொந்தரவு, ஜீரணக்கோளாறு, மலச்சிக்கல், தலைவலி நீங்க இது ஒரு சரியான ஆசனமாகும்.