மாற்றங்கள் தரும் கண்ணாடி தியானம் செய்வது எப்படி?
- 5 முதல் 10 நிமிடம் கண்ணாடி தியானம் செய்யலாம்.
- அமர்ந்து கொண்டோ, நின்று கொண்டோ தியானம் செய்யலாம்.
* கண்ணாடி இருக்கும் தனி அறையிலோ அல்லது குளியலறையிலோ 5 முதல் 10 நிமிடம் கண்ணாடி தியானம் செய்யலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
* நீங்கள் பயன்படுத்தும் கண்ணாடி உங்களை முழுமையாக தலை முதல் கால் வரை பிரதிபலிக்கும் விதத்தில் இருக்க வேண்டும். அதற்கேற்றவாறு அமர்ந்து கொண்டோ, நின்று கொண்டோ தியானம் செய்யலாம்.
* முதலில் கண்ணாடியில் தெரியும் உங்கள் முகத்தை பாருங்கள். உங்களைப்பார்த்து சிரியுங்கள். உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்.
* அதன் பின்னர் தொடர்ந்து உங்கள் முகத்தையே பாருங்கள். அப்போது உங்களிடம் எழும் உணர்வுகள், சிந்தனைகள் எதையும் கட்டுப்படுத்த வேண்டாம். அதன் போக்கிலே போங்கள். எதையும் தீர்ப்பிடாதீர்கள். அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.
* இறுதியில் நீங்கள் உங்கள் உருவத்தை கண்ணாடியில் பார்த்தவாறு உரையாடுங்கள்.
* உங்களை நீங்களே வாழ்த்துங்கள். (நீ அழகா இருக்க, பரவாயில்ல, எல்லாம் கடந்து போகும், நல்லது நடக்கும், உன்னால் முடியும், உன் இலக்கு நிறைவேறும் என உங்களுக்கு ஏற்றவாறு நம்பிக்கையாக பேசுங்கள்). இவ்வாறு செய்த பின் தியானத்தை நிறைவு செய்யுங்கள். இப்படி செய்யும்போது நீங்களே உங்களை புரிந்து கொண்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.