சமையல்

குளிர்காலத்துக்கு இதமான நூடுல்ஸ் சூப்

Published On 2024-01-08 10:14 GMT   |   Update On 2024-01-08 10:14 GMT
  • சிக்கன் சூப்பை தான் வீட்டில் செய்து சாப்பிட்டிருப்போம்.
  • வீட்டிலும் அருமையான சுவையில் சமைத்து சாப்பிடலாம்.

அனைவரும் அசைவ சூப் என்று எடுத்துக் கொண்டால் சிக்கன் சூப்பை தான் வீட்டில் செய்து சாப்பிட்டிருப்போம். அப்படி எப்போதும் ஒரே மாதிரி சிக்கன் சூப்பையே செய்து சாப்பிட்டு அழுத்திருந்தால், சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வெஜிடேபிள் சூப்பை டிரை செய்யுங்கள். பொதுவாக இந்த சூப்பை பெரிய பெரிய ஹோட்டல்களில் தான் சாப்பிடுவோம். ஆகவே இதனை வீட்டிலும் அருமையான சுவையில், ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை நூடுல்ஸ் - 1 கப்

காய்கறிகள் -1/2 கப் ( கேரட்-1/2, பீன்ஸ்-2, கேப்ஸிகம் -சிறிது, கோஸ் - சிறிது,

ஸ்வீட் கார்ன்- சிறிது ,பட்டாணி- சிறிது )

மிளகுத்தூள் – 1 ஸ்பூன்

பட்டர்-1 ஸ்பூன்

சோள மாவு-1 ஸ்பூன்

சோயா சாஸ் – ஸ்பூன்

வெங்காயம் – 1

பூண்டு –1 பல்

ஸ்ப்ரிங் ஆனியன் – 1/2

மல்லித் தழை- சிறிது

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில்ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கோதுமை நூடுல்ஸ் சேர்த்து வேக வைத்து 1 கப் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பட்டர் சேர்த்து உருகிய பின்னர் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள பூண்டை போட்டு வதக்கி விட வேண்டும். பின்னர் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்துவதக்கி விட்டு அதில் தண்ணீரை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னர் அதில் மிளகுத்தூள், வேக வைத்த நூடுல்ஸ் மற்றும் சோயாசாஸ் சேர்க்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் சோளமாவு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து அதனை சூப்பில் ஊற்றி கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விட்டு மல்லித்தழை, ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து பரிமாறினால் சூப்பரான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் ரெடி. இதே முறையில் சிக்கன், முட்டை சேர்த்தும் சூப் செய்யலாம்.

Tags:    

Similar News