சமையல்

மாலையில் டீயுடன் சாப்பிட அருமையான பன்னீர் போண்டா

Published On 2022-06-29 09:14 GMT   |   Update On 2022-06-29 09:14 GMT
  • இன்று பன்னீரைக் கொண்டு அட்டகாசமான போண்டா செய்யலாம்.
  • இது அற்புதமான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, எளிதில் செய்யக்கூடிய ரெசிபி.

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 300 கிராம்

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - 1/4 கப்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

புதினா - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

பேக்கிங் சோடா/சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* ஒரு பௌலில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதனுடன் மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி போண்டா பதத்திற்கு ஓரளவு கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் பன்னீர் துண்டுகள், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் போண்டா தயார்.

* அதை காரச்சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

Tags:    

Similar News