இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... 6 நாட்களில் சுமார் ரூ.3000 வரை உயர்வு
- வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை கடந்த 18-ந்தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. விலை குறைந்த நேரத்தில் கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் வந்த நிலையில், மீண்டும் அதிகரித்து கடந்த 19-ந்தேதி மீண்டும் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது. தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, நேற்று முன்தினம் ரூ.57 ஆயிரத்தையும் கடந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 225-க்கும், ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை நெருங்க இருக்கிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 320 அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,300-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ. 58,400-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 6நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,920 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
22-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800
21-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,160
20-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920
19-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,520
18-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
22-11-2024- ஒரு கிராம் ரூ. 101
21-11-2024- ஒரு கிராம் ரூ. 101
20-11-2024- ஒரு கிராம் ரூ. 101
19-11-2024- ஒரு கிராம் ரூ. 101
18-11-2024- ஒரு கிராம் ரூ. 99