உள்ளூர் செய்திகள்
சி.சி.டி.வி.காட்சிகள்

கோவையில் மொபட் திருடனை துரத்திய வாலிபர்

Published On 2022-01-13 09:03 GMT   |   Update On 2022-01-13 09:03 GMT
கோவையில் பட்டப்பகலில் வீட்டு முன்பு நின்ற மொபட் திருட்டு போனது.
கோவை:

கோவை பி.என்.புதூர் ராதிகா அவென்யூ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மொபட்டை சாவியோடு வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது அந்த வழியாக நடந்து வந்த மர்ம நபர் ஒருவர்  மொபட்டின் அருகே வந்தார். 

சாவியுடன் நிற்பதை பார்த்ததும் அதனை எடுத்து செல்ல முடிவு செய்த வாலிபர், யாராவது வருகிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தார்.ஆட்கள் வராதததை உறுதி செய்து கொண்ட அந்த வாலிபர், மொபட்டை எடுத்தார். சத்தம் கேட்டு வீட்டிற்கு சென்ற மொபட்டின் உரிமையாளர் வெளியில் வந்தார். 

அப்போது வாலிபர் ஒருவர் மொபட்டை எடுத்து சென்று கொண்டிருந்தார்.உடனே அவர் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவரின் சத்தத்தைக் கேட்டு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த  வாலிபர் மொபட் திருடனை துரத்தி சென்றார். 

அவரது பின்னால் உரிமையாளாரும் பரிதாபமாக ஓடினர். இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Similar News