காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 52 ஏரிகள் நிரம்பின
- 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
- நீர்வளத்துறை கட்டுப் பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல் பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப் பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
நேற்று ஒரே நாளில் 52 ஏரிகள் நிரம்பி உள்ளன. 241 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும் , 284 ஏரிகள் 50 சதவீதமும், 200 ஏரிகள் 25 சதவீதமும, 70 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழும் நிறைந்து உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
உத்திரமேரூர் - 20.5 செ.மீ
காஞ்சிபுரம் - 15.3 செ.மீ
செம்பரம்பாக்கம் - 13.2 செ.மீ
வாலாஜாபாத் - 12.7செ.மீ
ஸ்ரீபெரும்புதூர்- 13.1 செ.மீ
குன்றத்தூர் - 10.7செ.மீ
மஞ்சள் நீர் கால்வாய்
பலத்த மழை காரணமாக திருகாலிமேடு அருந்ததி பாளையம் பகுதியில் உள்ள மஞ்சள் நீர் கால்வாயில் இருந்து வெளியேறிய தண் ணீர் அருகில் உள்ள குடி யிருப்புகளுக்குள் புகுந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
மாநகராட்சி நிர்வாகம் சரியான திட்ட மிடாமல் மஞ்சள் கால்வாயில் மேற்கொண்டு வரும் பணியினால் கால்வாயில் போதிய மழை நீர் செல்ல முடியாமல் தண்ணீர் வெளியேறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.