உள்ளூர் செய்திகள்

உடன்குடி அமராபுரத்தில் ரூ.8 கோடியில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலம்.

உடன்குடி அமராபுரத்தில் உயர்மட்ட பாலத்தின் கீழ் தடுப்பணை கட்டி விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

Published On 2023-08-12 09:03 GMT   |   Update On 2023-08-12 09:03 GMT
  • எப்போதோ தண்ணீர் வரும் கருமேனி ஆற்றின் குறுக்கே அமராபுரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
  • இதன் அடியில் சுமார் 3 அடி உயரத்திற்கு திறப்பு ஷட்டருடன் கூடிய தடுப்பு கட்டி தண்ணீரை சேமித்தால் இப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும்.

உடன்குடி:

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி ஊராட்சி அமராப்புரம் வழியாக செல்லும் கருமேனி ஆற்றில் அடிக்கடி தண்ணீர் வருவதில்லை. உடன்குடி பகுதியில் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பி கடலுக்குச் செல்லும் போது மட்டும் தான் இந்த ஆறு வழியாக தண்ணீர் வரும். தொடர்ந்து சுமார் 3 வருடங்களாக தண்ணீர் வரவில்லை. எப்போதோ தண்ணீர் வரும் கருமேனி ஆற்றின் குறுக்கே அமராபுரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் அடியில் சுமார் 3 அடி உயரத்திற்கு திறப்பு ஷட்டருடன் கூடிய தடுப்பு கட்டி தண்ணீரை சேமித்தால் இப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும். அருகில் உள்ள கடல் நீர்மட்டம் விவசாய நிலங்களில் ஊடுருவாமல் தடுக்கப்படும். எனவே உடனடியாக தடுப்பு அணைகட்ட வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News