- என்ஜின் மட்டும் வேறு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது
- பயணிகள் போக்குவரத்து ரெயிலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே மகேந்திரவாடி ரெயில் நிலையம் உள்ளது.
இந்த ரெயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு சென்னை யில் இருந்து காட்பாடி மார்க்கமாக செல்லும் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது. பின்பு என்ஜின் மட்டும் அங்கிருந்து வேறு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை என்ஜின் வரவழைக்கப் பட்டு சரக்கு ரெயிலோடு இணைக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென சரக்கு ரெயிலின் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்பு தண்டவாளத்தில் தடம்புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரத்தை வரவழைக்க ஜோலார்பேட்டை ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிரதான லைனில் இல்லாமல் லூப்லைனில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பயணிகள் போக்குவரத்து ரெயிலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.