உள்ளூர் செய்திகள்

சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்த எதிர்ப்பு

Published On 2023-10-31 06:47 GMT   |   Update On 2023-10-31 06:47 GMT
  • அரியலூர் சிமெண்ட் ஆலைக்கான சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்த எதிர்ப்பு எழுந்துள்ளது
  • நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது என எதிர்ப்பு

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம், நெருஞ்சிக்கோரை, பெரியநாகலூர், அஸ்தினாபுரம், வாலாஜநகரம், தாமரைக்குளம், சீனிவாசபுரம் ஆகிய கிராம மக்கள் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் எடுப்பதற்காக நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாங்கள் கொடுத்துள்ள நிலத்தில் நவம்பர் மாதம் 28-ந் தேதி சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு சிமென்ட் ஆலை நடத்தவுள்ளது.எனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும் எங்களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News