- ஆட்சி மொழி சட்ட வாரம் முன்னிட்டு நடைபெற்றது
- அனைத்து துறை அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்
அரியலூர்,
ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரின் உத்தரவுப்படி அரியலூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் வருகிற 8 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. இதன் முதற்கட்டமாக அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் அரசுப் பணியாளர்களுக்கு நேற்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது. முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் சிவசாமி கலந்து கொண்டு, சுற்றோட்ட குறிப்புகள், செயல் முறை ஆணைகள் தயாரித்தல், குறிப்பாணை, மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி வரலாறும் சட்டமும், கணினிப்பயிற்சி, ஆட்சிமொழி அரசாணைகளும் செயலாக்கமும், மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும், ஆட்சிமொழி ஆய்வும் குறை களைவு நடவடிக்கைகளும் மற்றும் தமிழில் குறிப்புகள் வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியமாக்கல் ஆகிய தலைப்புகளில் அரசுப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தார். முன்னதாக தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்(பொ) சித்ரா வரவேற்றார். பயிற்சி வகுப்பில் அனைத்து துறை அரசு பணியாளர்களும் கலந்து கொண்டனர்.fil