உள்ளூர் செய்திகள்

பஸ்நிலையத்தில் கிடக்கும் குப்பை கழிவுகளை படத்தில் காணலாம்.

உணவுகளை அருந்திவிட்டு பாக்கு தட்டுகளை அங்கேயே போடுவதால் துர்நாற்றம்

Published On 2023-05-16 09:42 GMT   |   Update On 2023-05-16 09:42 GMT
  • உணவுகளை அருந்திவிட்டு எறியப்படும் பாக்கு தட்டுகளால் குப்பைகள் சேருவதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசுகின்றன.
  • சரியான முறையில் தூய்மை பணி இல்லாததால் ஒருசில பகுதிகளில் குப்பை கூடாரமாக காட்சியளிக்கின்றன.

 ஒகேனக்கல்,

ஒகேனக்கல் சுற்றுலா தலமானது தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லும் நடைபாதை, கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவுகளை அருந்திவிட்டு எறியப்படும் பாக்கு தட்டுகளால் குப்பைகள் சேருவதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசுகின்றன.

சில நாட்களாக சரியான முறையில் தூய்மை பணி இல்லாததால் ஒருசில பகுதிகளில் குப்பை கூடாரமாக காட்சியளிக்கின்றன.

இதனை கண்டு சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த சூழ்நிலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் பாக்கு தட்டு மற்றும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News