உள்ளூர் செய்திகள்

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

கடலூரில் பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல்

Published On 2022-07-18 08:21 GMT   |   Update On 2022-07-18 08:21 GMT
  • கடலூரில் பா.ஜ.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கடலூர்:

கடலூர் மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பாஜக எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில பொதுச் செயலாளர் அரசு ரங்கேஷ் தலைமையில் நிர்வாகிகள் காரைக்கண்ணன், வெற்றிவேல், மாநகராட்சி கவுன்சிலர் சக்திவேல், சுரேஷ் பிச்சை பிள்ளை, அக்னி கிருஷ்ணமூர்த்தி, மேகநாதன், விஜி, வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் திடீரென்று சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் கூறுகையில், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் சாதி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சமூகத்தை இழிவு படுத்தும் விதமாக உள்ளது. 

ஆகையால் ஜாதி வன்கொடுமையின் கீழ் மிகவும் கண்டிக்கத்தக்கதோடு, வினாத்தாள் தயார் செய்த பல்கலைக்கழக பேராசிரியர் மீதும் துணைவேந்தர் மீதும் சட்டப்படி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை ஈடுபட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News