உடன்குடி அருகே 15 வருடமாக பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
- வாத்தியார் குடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம் கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
- 2 பஸ்களையும் மாற்று பாதையில் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தமிழகமீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
செட்டியாபத்து ஊராட்சிக்குட்பட்ட வாத்தியார் குடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மக்கள் பள்ளி, ஆஸ்பத்திரி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பஸ்களில் செல்ல வேண்டியதுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், முதியவர்கள்மிகுந்த சிரமப்படு கின்றனர்.
மேலும் புகழ் பெற்ற கூழையன் குண்டு அல்லிஊத்து கல்லால் அய்யனார் கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த பக்தர்கள் பஸ் வசதி இல்லாததால் உடன்குடி பஸ் நிலையத்தில் இருந்து தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து கோவிலுக்கு செல்கின்றனர்.
பொது மக்கள், பக்தர்களின் நலன் கருதி உடன்குடி - பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் தைக்காவூரில் இருந்து வாத்தியார் குடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம் வழியாக உடன்குடி - செட்டியாபத்து மெயின் ரோட்டுக்கு வந்து உடன்குடி பஸ் நிலையம் செல்லும் வகையில் பஸ்களைஇயக்க வேண்டும்.
குறிப்பாக உடன்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ் தடம் எண் 61 டி திருச்செந்தூரில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும், உடன்குடியில் இருந்து காலை 9.30 மணி, மாலை 4.10 மணிக்கும் புறப்படுகிறது. இது போன்று அரசு பஸ் தடம் எண் 62 பி திருச்செந்தூரில் இருந்து மாலை 3.15 மணி, உடன்குடியில் இருந்து மாலை 4.30 மணிக்கும் புறப்படுகிறது.இந்த 2 அரசு பஸ்களை மேற்குறிப்பிட்டுள்ள 2 கிராமங்கள் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்படி பஸ்களை இயக்குவதால் சுமார் 15 ஆண்டு காலமாக எந்த வித பஸ்வசதியும் இல்லாத இரு கிராமத்திற்கு பஸ் வசதி கிடைக்கும்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக 2 பஸ்களையும் மாற்று பாதையில்இயக்கி 15 வருடமாக பஸ் வசதி இல்லாத ஊருக்கு பஸ் வசதி கிடைக்கநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.