கார் டிரைவிங் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
- இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு கார் டிரைவிங் கற்று கொடுக்கப்பட்டது.
- 140-க்கும் மேற்பட்டோருக்கு லைசென்ஸ் வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் மத்திய அரசின் ஸ்வாபிமான் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி கொடுக்கப்பட்டது.
அந்தத் திட்டத்தின் கீழ் தஞ்சை டி.பி.ஸ்கில்ஸ் மையத்தில் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு கார் டிரைவிங் கற்று கொடுக்கப்பட்டது. 45 நாட்கள் இந்த இலவச பயிற்சி நடைபெற்றது. முடிவில் 140-க்கும் மேற்பட்டோருக்கு இன்று சான்றிதழ், லைசென்ஸ் வழங்கும் விழா தஞ்சையில் நடைபெற்றது.
இதற்கு மகேந்திரா பைனான்ஸ் டிவிஷன் மேலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற திருச்சி சி.இ.ஓ. சுவாமிநாதன், லயன்ஸ் கிளப் மாவட்ட இரண்டாம் நிலை துணை ஆளுநர் சவரிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ், லைசன்ஸ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் டி.பி.ஸ்கில்ஸ் புராஜெக்ட் மேலாளர் ஜெய்சிங், டி.பி.ஸ்கில்ஸ் ஸ்ரீதர் , பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சை டி.பி.ஸ்கில்ஸ் சென்டர் தலைவர் ஆறுமுகம் செய்திருந்தார்.