உள்ளூர் செய்திகள்
கூடலூரில் குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம்
- ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா தலைமையில் நடைபெற்றது
- பள்ளி இடைநிற்றல், போக்சோ வழக்குகள் குறித்து விவாதம்
ஊட்டி,
கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றிய தலைவர் கீர்த்தனா தலைமையில் நடைபெற்றது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு), வட்டார மருத்துவ அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் , கல்வி, காவல், வருவாய்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், தாய்மை, நாவா அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகள், பள்ளி இடைநிற்றலை குறைக்க நடவடிக்கை எடுப்பது, போக்சோ வழக்குகள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.