திண்டுக்கல் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்
- பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பயணிகள் நடந்து செல்ல இடையூறு ஏற்பட்டு வருகிறது. கடை உரிமையாளர்கள், அளவுக்கு மீறி கடைகளின் எல்லையை கடந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
- பஸ் நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகளின் திடீர் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையம், மதுரை, திருச்சி, கரூர், திருப்பூர் ஆகிய தொழில் மாநகர ங்களை இணைக்கும் பெரும் பாலமாக இருந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களில் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வர்த்தக ரீதியாகவும் சுற்றுலா தளத்திற்கு செல்வ தற்காகவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் பஸ் நிலையமாக அமைந்துள்ளது.
இந்த பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பயணிகள் நடந்து செல்ல இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள், அளவுக்கு மீறி கடைகளின் எல்லையை கடந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நடந்து செல்ல பெரிய இடையூறு ஏற்பட்டு வருகிறது. ஆக்கிர மிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பல்வேறு புகார்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் அளிக்கப்பட்டு வந்தது.
இதனை அடுத்து மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அலுவ லர்கள் மற்றும் ஊழியர்கள் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மதுரை, சேலம், நத்தம், தேனி ஆகிய பஸ்கள் நிறுத்தும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். பஸ் நிலை யத்தில் நடந்த திடீர் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.