மாநகராட்சி கடை வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும்
- பஸ் நிலைய வணிகவளாகம் கடைகள்-குத்தகைதாரர் நலச்சங்கம் கோரிக்கை
- கோவை மேயர் கல்பனாவுடன் சந்திப்பு
கோவை,
கோவை மாநகராட்சி பஸ் நிலைய வணிகவளாக கடைகள், குத்தகைதாரர்கள் நலச்சங்க தலைவர் ராகவலிங்கம், செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஞானபால் செல்வராஜ் ஆகியோர் மாநகராட்சி மேயர் கல்பனாவிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது பல்வேறு சிரமங்களுக்கு இடையே மாநகராட்சிக்கு சொந்த மான வணிகவளாக கடை களின் வாடகை நிலு வைத்தொகையை அபராத வட்டியுடன் செலுத்தி மாநகராட்சி நிபந்தனைகளை ஏற்று அனைத்து வாடகைக்கடைகளையும் பல கஷ்டங்களுக்கு இடையே நிலுவையின்றி செலுத்தி உள்ளோம்.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் முதலாம் அலையின்போ தும், 2-வது அலையின்போ தும் கடைகள் அனைத்தும் செயல்படாமல் இருந்த காலத்தில் கடை வாடகை தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஆனால் 2 மாதம் மட்டுமே கடை வாடகை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 3 மாத கடை வாடகை தள்ளுபடி செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.