குன்னூரில் பல லட்சம் மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள்- மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
- கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழநாற்று தொகுப்புகளை வழங்கினார்.
- மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நடமாடும் மருத்துவக்குழு முகாமை பார்வையிட்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குன்னூார் தாலுகாவில் உள்ள இளித்தொரையில் தோட்டக்கலைத்துறை மூலம் உருவான பசுமைக்குடில்களை பார்வையிட்டு, அங்கு உள்ள விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழநாற்று தொகுப்புகளை வழங்கினார்.
பின்னர் தேனலை ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ரூ.31.20 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் 2 கூடுதல் வகுப்பறை கள், உபதலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள பெண் கள் கழிவறை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின்கீழ் நடக்கும் வகுப்புகள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நடமாடும் மருத்துவக்குழு முகாமை பார்வையிட்டார்.
அப்போது அங்கு உள்ள 8 பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கிய அதிகாரி வெங்கடேஷ், முகாமில் நோயாளிக்கு பிசியோதெரபி வழங்கப்படு வதையும் நேரில் பார்வையிட்டார்.தொடர்ந்து குன்னூர் பழத்தோட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், முதல்-அமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் குப்பைக்குளி முதல் சோகத்தொரை வரை ரூ.176 லட்சம் மதிப் பில் சாலை மேம்பாட்டு பணிகள், வசந்தம் நகரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத் தின்கீழ் குடிநீர் ஆதார பணிகள், பிருந்தாவன் பள்ளி அருகில் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் விடுதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், செயற்பொ றியாளர் செல்வகுமார், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, குன்னூர் தாசில்தார் கனி சுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன் குமார மங்கலம் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.