உள்ளூர் செய்திகள்

அவரைக்காய்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

தரமில்லாத விதைகளால் அவரையில் நோய் தாக்கம் ஏற்பட்டு விளைச்சல் பாதிப்பு -விவசாயிகள் கவலை

Published On 2023-10-03 05:33 GMT   |   Update On 2023-10-03 05:33 GMT
  • அவரைச்செடிகளில் பூக்கள் மட்டுமே அதிக அளவு பூத்த நிலையில் காய்கள் சரிவர காய்க்கவில்லை. பெரும்பாலான காய்கள் மஞ்சள் நிறத்தில் அதிகமாக புழு க்கள் கொண்டதாக இருந்தது.
  • வேளாண்துறை அதிகாரிகள் இப்பகுதி விவசாய நிலங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடியில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது பொட்டிபுரம் கிராமம். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேர்வு செய்ய ப்பட்ட இடம் என்பதன் மூலம் உலகளவில் இந்த கிராமம் பிரசித்தி பெற்றது. முற்றிலும் விவசாயத்தைச் சார்ந்தே உள்ள இப்பகுதியில் தற்போது அவரைக்காய் அதிக அளவில் பயிரிட ப்பட்டுள்ளது.

கடந்த முறை நடப்பட்ட அவரை விதைகள் மூலம் உருவாக்கப்பட்ட அவரைச்செடிகளில் பூக்கள் மட்டுமே அதிக அளவு பூத்த நிலையில் காய்கள் சரிவர காய்க்கவில்லை. பெரும்பா லான காய்கள் மஞ்சள் நிறத்தில் அதிகமாக புழு க்கள் கொண்டதாக இருந்தது.

இதனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லை. இங்கு பறிக்கப்படும் காய்கள் தரம் பிரிக்கப்பட்டு தேவாரம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மஞ்சள் பூத்த காய்கள் பறிக்காமல் செடியிலேயே விடப்படுகிறது.

மேலும் நோய் தாக்கம் ஏற்பட்ட காய்கள் விற்பனை யாகாமல் சாலையோரம் கொட்டப்பட்டு மாடுகளுக்கு இறையாக மாறியுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவரைக்காய் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.18 முதல் ரூ.25 வரை மட்டுமே வியாபாரி களால் வாங்கப்படுகிறது.

விளைச்சல் பாதிப்பு குறித்து தேனி மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக விவசாயிகள் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆர்.டி.ஓ. தலைமையில் ஆய்வுக்குழுவை நேரில் அனுப்பி விசாரணை நடத்தவும், நிவாரணம் பெற்றுத் தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்த னர்.

ஆனால் இது வரை விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காத தால் மிகுந்த மனவேதனை யடைந்துள்ளனர். எனவே வேளாண் துறை அதிகாரி கள் இப்பகுதி விவசாய நிலங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News