உள்ளூர் செய்திகள்

சின்னசேலத்தில் சேலம் - சென்னை சாலையில் 28-ந்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு

Published On 2023-06-17 09:22 GMT   |   Update On 2023-06-17 09:22 GMT
  • மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் தலை நசுங்கி உயிரிழந்தார்.
  • தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரத்தின் உள்ளே செல்லும் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் விதமாக சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 4 வழி சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் தலை நசுங்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பை இன்று வெளியிட்டது. அதில் வருகின்ற 28-ந்தேதி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. அதனால் அதற்கு முன்பாகவே தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும். மேலும் 28-ந்தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேசிய நெடுஞ்சாலையோ, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இதர துறைகள் பொறுப்பல்ல. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News