சத்தியமங்கலம் அருகே சாலையோரம் உலா வரும் காட்டெருமைகள் கூட்டம்-வனத்துறையினர் எச்சரிக்கை
- சத்தியமங்கலம் அருகே சாலையோரம் காட்டெருமைகள் உலா வருவதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
- வாகன ஓட்டி கள் காட்டெருமைகளை கண்டால் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தவோ, அதிக ஒளி எழுப்பி ஆரன்களை அடிக்கவோ கூடாது.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட ஏரா ளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்கு கள் குடிநீர், உணவை தேடி அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை யோரம் வருவதும் ஊருக்குள் புகுந்து பயி ர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சத்திய மங்கலம்- மைசூர் தேசிய நெடு ஞ்சாலையில் சாலை யோரம் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்தன. காட்டெருமைகள் கூட்டத்தைக் கண்ட சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு கீேழ இறங்கி ஆபத்தை உணராமல் தங்க ளது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதை தொடர்ந்து ரோந்து வந்த வனத்துறை யினர் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்த னர். இதுகுறித்து வனத்துறை யினர் கூறும் போது, காட்டெருமைகள் மாலை வேளையில் தண்ணீர் அருந்து வதற்கு குட்டை களுக்கு வருவது வழக்கமான ஒன்று தான். வாகன ஓட்டி கள் காட்டெருமைகளை கண்டால் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தவோ, அதிக ஒளி எழுப்பி ஆரன்களை அடிக்கவோ கூடாது. அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.