சூலூர் விமானப்படைதளத்தில் போர் விமானங்கள் சாகசம்
- பள்ளி- கல்லூரிகளை சேர்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேரில் கண்டு களித்தனர்.
- இதில் பங்கேற்ற வீரர்கள் அவற்றின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்
சூலூர்,
கோவை சூலூர் விமான படைத்தளத்தில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி- கல்லூரிகளை சேர்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேரில் கண்டு களித்தனர்.குறிப்பாக தேஜஸ், எம்.ஐ-17, சாரங் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களின் சாகச நிகழ்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் விமானப்படையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதில் பங்கேற்ற வீரர்கள் அவற்றின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.சூலூர் விமானப்படை தளத்தில் போர் விமான சாகச நிகழ்வை நேரில் கண்டு களித்த மாணவ மாணவிகள் கூறுகையில், விமானங்களை அருகில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது புதிய அனுபவமாக இருந்தது. போர் விமானங்களில் வீரர்கள் நிகழ்த்திய சாகசங்களை வியப்புடன் பார்த்து மகிழ்ந்தோம்.
இந்திய விமானப்படையின் செயல்பாடுகளை அறிய இது நல்ல வாய்ப்பாக அமைந்தது. இது விமானப்படையில் சேர எங்களுக்கு உத்வேகம் அளித்தது என தெரிவித்தனர்.