பரமத்தி அரசு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சுகாதாரப் பணிகள் பூச்சியில் வல்லுனர் சேகர் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பரமத்திவேலூர்:
பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி தலைமை தாங்கினார். பரமத்தி பேரூராட்சி துணைத் தலைவர் ரமேஷ் பாபு மற்றும் கவுன்சிலர் நாச்சிமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் பூச்சியில் வல்லுனர் சேகர் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகலா ஆல் பென்டசோல் மாத்திரை எப்படி சாப்பிடுவது, குடல் புழுக்களின் தன்மை, குடற்புழு நீக்க நாள் மற்றும் மாணவர்களுக்கு தன் சுத்தம் போன்றது பற்றி விளக்கமாக கூறினார்.
பரமத்தி வட்டாரத்துக் குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் 14 ஆயிரத்து 112 மாணவ, மாணவியருக்கும், அங்கன்வாடியில் 3561 குழந்தைகளுக்கும் என 17,673 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.
பரமத்தி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி கைகளை கழுவும் முறைகளை பற்றி கூற கிராம சுகாதார செவிலியர் சிந்தாமணி செய்து காண்பித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் குமார், ராஜ்குமார், பெரியசாமி, அருண் ,தனபால் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.