உள்ளூர் செய்திகள்

பாபநாசத்தில், ரூ.75 லட்சத்தில் புதிய மீன்- இறைச்சி மார்க்கெட்

Published On 2023-04-05 10:38 GMT   |   Update On 2023-04-05 10:38 GMT
  • ரூ 6.10 லட்சம் மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வது.
  • மரபுசாரா கழிவுகளை ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் தீர்வு செய்வது.

பாபநாசம்:

பாபநாசம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பூபதி ராஜா, செயல் அலுவலர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்பாபநாசம் பேரூராட்சியில் மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டுவது எனவும், திருப்பாலைத்துறை உரக்கிடங்கில் நீண்ட காலமாக தேங்கியுள்ள மரபுசாரா கழிவுகளை ரூ 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் தீர்வு செய்வது எனவும்,

ரூ 6.10 லட்சம் மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வது எனவும், பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் இயங்கி வரும் மதுபான கடை பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளதால் பாபநாசம் வடக்கு வீதியில் மயானம் அருகில் மாற்றுவது எனவும், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், கோட்டையம்மாள், கெஜலட்சுமி, விஜயா, பிரகாஷ், பாலகிருஷ்ணன். சமீரா பர்வீன், புஷ்பா சக்திவேல், ஜாபர் அலி, முத்துமேரி மைக்கேல் ராஜ், தேன்மொழி உதயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News