உள்ளூர் செய்திகள்
சூளகிரி அருகே கங்கம்மா கோவில் சாமி சிலை தூக்கி செல்ல தடை
- ஊர்வலம் சென்று கோவில் சாமியை தூக்கி செல்ல பெரியோர்கள், இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
- இளைஞர்கள் சாமி சிலையை தூக்க கூடாது என்று சிலர் கூறியுள்ளனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பண்ணப்பள்ளி ஊராட்சி சீகனப்பள்ளி கிராமத்தில் புதிதாக கங்கம்மா கோவிலை அனைத்து சமுதாய ஊர் மக்கள் சேர்ந்து கட்டி திறப்பு விழா நடத்தியுள்ளனர்.
நேற்று இரவு ஊர்வலம் சென்று கோவில் சாமியை தூக்கி செல்ல பெரியோர்கள், இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
அப்போது இளைஞர்கள் சாமி சிலையை தூக்க கூடாது என்று சிலர் கூறியுள்ளனர். அதன்பின்பு கீழ் சாதியினர் தூக்க மறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு எற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த பேரிகை போலீசார்கள் சண்டை சச்சரவு செய்ய வேண்டாம் என்று சாமி சிலையை எடுத்து செல்ல தடை விதித்தது.
இதனால் இன்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.