உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டி தீர்த்த கன மழை
- 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
- அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அதிக மழை பெய்துள்ளது. மயிலத்தில் 50 செ.மீ. மழை பெய்துள்ள நிலையில் அங்குள்ள தென் ஏரி உடைந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.
இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 செ.மீ. மழை பெய்திருந்தது. தற்போது 47 செ.மீ. மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.