கோவையில், 128 மையங்களில் பிளஸ்-1 தேர்வு தொடங்கியது
- முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடந்தது.
- மாணவர்களும் தேர்வு தொடங்கும் 20 நிமிடத்திற்கு முன்பு தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
கோவை,
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.
முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு மொத்தம் 128 மையங்களில் நடந்தது.
இந்த தேர்வை மாவட்டத்தில் 362 பள்ளிகளை சேர்ந்த 15,630 மாணவர்கள், 18,754 மாணவிகள் என மொத்தம் 34,390 மாணவ மாணவிகள் எழுதினர். தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் அனைத்து தேர்வர்களும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டுமென அறிவு றுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி அனைத்து மாணவர்களும் தேர்வு தொடங்கும் 20 நிமிடத்திற்கு முன்பு தேர்வு மையங்களுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அந்தந்த மையங்களில் உள்ள தகவல் பலகையில் தேர்வு அறை எண், தேர்வர்கள் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நோட்டீசை பார்த்து விட்டு அறைகளுக்குள் சென்றனர். மாணவர்களின் உடமை களை சோதனை செய்த பின்னரே அறை கண்கா ணிப்பாளர்கள் உள்ளே செல்ல அனுமதித்தனர்.
பிளஸ்-1 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் தேர்வை ஆர்வமுடன் வந்து எழுதினர். பின்னர் தேர்வுகள் 1.15 மணிக்கு முடிந்தது.
தேர்வில் காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க 180 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 128 முதன்மை கண்கா ணிப்பாளர்கள், 138 துறை அதிகாரிகள், 1,800 அறை கண்காணிப்பா ளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.